ஆனி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ராஜ கோபுரத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வைத்து கிரிவலம் மேற்கொண்ட, பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிரிவலப்பாதையில் சுற்றி வந்து அண்ணாமலையாரை தரிசித்தனர்.