தீபாவளி அன்று மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சைக்கிள், புத்தாடை மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்த ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெற்றி என்ற மாற்றுத்திறனாளி சிறுவனின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ பரிசுகளை வழங்கியுள்ளார்.