கும்பகோணம் வெற்றிலை உள்ளிட்ட இரண்டு பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கலைத்தட்டு, வீணை, நாதஸ்வரம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு உள்ளிட்ட பத்து பொருட்கள் ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இந்நிலையில், சம அளவு காரத்தன்மை கொண்ட கும்பகோணம் வெற்றிலைக்கும், அதேபோல் பல நூறு ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் தயார் செய்யக்கூடிய மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தை சேர்ந்த 64 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.