தென்காசி மாவட்டம் புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டிற்கு புவிசார் குறியீடு வழங்கியதைத் தொடர்ந்து முதல் முறையாக பிரிட்டனுக்கு எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவ நலன் கொண்ட இந்த புளியங்குடி எலுமிச்சையை மக்கள் அதிகமாக விரும்புவதாகவும், பல்வேறு மாநிலங்களுக்கு அவற்றை ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவித்தனர். இதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.