தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் ஆறரை லட்சம் பேருக்கு வாக்குரிமை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குரிமை என்பது அவரவர்கள் பிறந்த மாநிலத்திலே தான் வழங்கப்பட வேண்டும் எனவும், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வாக்குரிமை கொடுத்துள்ளதை தேர்தல் ஆணையம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.இதையும் படியுங்கள் :ஆடிக் கிருத்திகை: முருகர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து சென்று நேர்த்திக்கடன்..!