பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் சமாதான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவருடன் இருக்கும் சிலர் அதனை கெடுத்து வருவதாகவும் கட்சியின் தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, ராமதாசுடன் 40 முறைக்கு மேல் தாம் பேசியதாகவும் இடையில் சில பூசாரிகள்தான் கெடுத்து விடுவதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், தேர்தலுக்காக பாமக தொண்டர்கள் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.