மதுரை விளாங்குடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு கசிந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிலிண்டரை பத்திரமாக மீட்டு, சுண்ணாம்புக் கரைசல் பயன்படுத்தி குளோரின் வாயுக்கசிவை தடுத்தனர். வாயுக்கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து செல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.