கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சமையல் செய்த போது எரிவாயு சிலிண்டரில் கேஸ் கசிந்து தீ பற்றியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.