கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் ரெகுலேட்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.கோணம்காடு பகுதியை சேர்ந்த பிரிட்டோ ஜெகின் ராணி, தேனீர் போடுவதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதால், பொருட்கள் கருகி சேதமடைந்தன. தீ விபத்து நிகழ்ந்த வீட்டில் மூதாட்டி சிக்கியிருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டனர்.இதையும் படியுங்கள் : கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு... ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீரால் நன்னீராட்டல்