ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால், ஆத்திரமடைந்த ஊழியர்கள் தையல் மெஷின்களை வெளியே எடுத்து போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கணபதி காட்டூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீராம் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில், 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக சம்பளம் கேட்டு போராடி வந்த ஊழியர்கள், உரிமையாளர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தாததால் தையல் மெஷின்களை வெளியே எடுத்து போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதையும் படியுங்கள் : மதுரை மாவட்ட சுகாதார அலுவலரை கண்டித்து தர்ணா... தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்