திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் 12 லட்ச ரூபாய் செலவில் தயாரான உலர் பழங்களால் ஆன மாலைகளை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். வரும் 7-ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி, பக்தர் ஒருவர் உலர் பழங்களால் ஆன மாலை ஆர்டர் செய்திருந்தார். கடந்த 10 நாட்களாக பிஸ்தா, முந்திரி, பாதாம், ஜெர்ரி, கறுப்பு திராட்சை போன்ற சத்து மிக்க உலர் பழங்களை கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.இதையும் படியுங்கள் : எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திப்போம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்