தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரும்பாண்டி ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஊராட்சியில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டப்பட்டுள்ளது. குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிவதால், கரும்புகை சூழ்ந்து சுவாசக் கோளாறு ஏற்படுவதால் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் விரைவில் அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.