ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குவியல் குவியலாக குவிந்திருந்த மருத்துவ கழிவுகளும் குப்பைகளும் நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக தற்போது அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் அரசு தலைமை மருத்துவமனையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதோடு, ஈக்கள், கொசுக்கள் உருவாகி முற்றிலும் சுகாதாரமற்ற சூழல் நிலவி வந்தது.இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மேலும் தொற்று பாதிப்புக்கு ஆளாகக்கூடிய ஆபத்தோடு, புதிய நோயாளிகள் உருவாகக்கூடிய ஆபத்தும் இருந்து வந்த நிலையில் தற்போது மாநகராட்சியால் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.