திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் சாலையில் கங்களாஞ்சேரி வெட்டாற்று பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து உள்வாங்கியுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மார்க்கங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : பெட்ரோல் பங்க் ஊழியரை நபர் தாக்கிய சிசிடிவி காட்சி மதுபோதையில் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப வந்த இருவர்..!