வேலூர் மாவட்டம் காட்பாடியில் கல்லூரி மாணவனை மிரட்டி 74 ஆயிரம் ரூபாய், வாட்ச் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில் கல்லூரி வளாகத்தின் எதிரே அறையெடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி அறைக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், மாணவனை தாக்கி பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர். இதனை தொடர்ந்து பாஜக பிரமுகர் மகன் ரோஹித், பிரவீன், விக்னேஷ், ஹரி, அபினாஷ் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.