தென்காசி அருகே ஆன்லைன் ஆப் மூலம் ஆசைவார்த்தை கூறி இளைஞரை அழைத்து பணம் மற்றும் செல்போளை பறித்த கும்பலை போலீஸார் கைது செய்தனர். GRINDR APP மூலம் இளம் பெண் பேசுவது போல் நைசாக பேசி சுரண்டை பகுதிக்கு அந்த இளைஞரை வரவழைத்து, மர்மநபர்கள் அவரை தாக்கி பணம், செல்போன் மற்றும் நகைகளையும் பறித்து சென்றதாக போலீஸாரிடம் புகார் அளித்தார்.