தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மும்பையில் இருந்து அயோத்தி ராமர் தோற்றத்தில் இருக்கும் விநாயகர் சிலை கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏரல் செங்குந்தர் வண்டி மலச்சி அம்மன் கோவில் தெருவில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் வித்தியாசமான விநாயகர் சிலைகள், மும்பையில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு அயோத்தி பால ராமர் தோற்றம் கொண்ட விநாயகர் சிலை வரவழைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.