திருவள்ளூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசாரை கண்டித்து இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காக்களூர் ஏரியில் கரைப்பதற்காக இந்து முன்னணியினர் சுமார் 80 விநாயகர் சிலைகளை வாகனங்களில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது தங்கள் ஊர்வலம் செல்லும் பகுதியில் மற்ற வாகனங்களுக்கு அனுமதிக்கக்கூடாது என இந்து முன்னணியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.