சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 18-ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி துவங்கியது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் கடந்த 17,ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு 21ஆயிரம் வகை விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி துவங்கியுள்ளது. செப்டம்பர் 17ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் இலவசமாக விநாயகர் கண்காட்சியை பார்வையிடலாம்.