திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பகுதியில் மீலாது நபி மற்றும் 41-வது மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவை முன்னிட்டு கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், 1,250 கிலோ அரிசியை கொண்டு உணவு சமைக்கப்பட்டு சுமார் 8 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. பேகம்பூர், ஆர்.வி நகர், ஜின்னா நகர், பாறைப்பட்டி, யூசுப்பியா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு கந்தூரி உணவை பெற்று சென்றனர்.