திண்டுக்கல் அருகே நடைபெற்ற கந்தூரி விழாவில் திரளான பொதுமக்கள் அன்னதான உணவை பெற்றுச் சென்றனர். நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டியில் நண்பர்கள் குழு சார்பில் மிலாது நபி மற்றும் கந்தூரி விழா நடைபெற்றது. இந்த விழாவில், பேகம்பூர், ஜின்னாநகர், பூச்சிநாயக்கன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஜாதி, மத பாகுபாடின்றி கந்தூரி உணவை பெற்றுச் சென்றனர்.