செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டிற்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி உற்சவர் கொடிமரம் முன் எழுந்தருள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.