சென்னை வடபழனி முருகன் கோவிலில் மகா கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. கந்தசஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை முதலே வடபழனி முருகன் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் காலையில் சாரல் மழை பெய்த நிலையில் அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.