திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை கந்த சஷ்டி திருவிழா தொடங்கும் நிலையில், பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இக் கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதற்காக யாகசாலை மண்டபம் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் அடுத்து ஆறு நாட்கள் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி விரதம் இருப்பதற்காக கோவில் வளாகத்தில் 20 தற்காலிக கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் 27-ம் தேதி மாலை கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது.இதையும் படியுங்கள் : தரைபாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்