வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரசமங்கலம் பகுதியில் உள்ள தாங்கல் ஏரி நிரம்பி, குளக்கரை பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிக்குள்ளானதால் ஆத்திரமடைந்த மக்கள், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, காட்பாடி - குடியாத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.