நெல்லை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள பிரபல பீட்சா நிறுவனத்தில் நெல்லை பாளையங்கோட்டை திமுக பகுதி செயலாளர் அண்டன் செல்லத்துரை என்பவரது மகன் ஆல்வின் நண்பர்களுடன் பீட்சா வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் ஆர்டர் செய்த பீசா வருவதற்கு காலதாமதம் ஆன நிலையில் கடை ஊழியருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து கடை ஊழியர் நாராயணனை ஆல்வின் கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காயங்களுடன் நாராயணன் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நாராயணன் அளித்த புகாரின் பேரில் ஆல்வின் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.