நீலகிரி மாவட்டம் குன்னூர் நகருக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் ரேலியா அணையை தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. அணையில் தண்ணீர் குறைந்து வறண்டு காணப்படுவதால், பருமழை தொடங்குவதற்கு முன்பு அணையை தூர்வார குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி உத்தரவிட்டார். குன்னூர் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும், வறண்ட சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை அகற்றி ஆழப்படுத்தும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.