திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெண்ணுடன் பேசுவது தொடர்பான பிரச்சனையில், நண்பரின் கழுத்தில் பாட்டிலை வைத்து மிரட்டி, நண்பர்கள் இருவர் அவரை சரமாரியாக அடித்து உதைத்த வீடியோ வெளியாகியுள்ளது.மேற்கு பல்லடம் பகுதியை சேர்ந்த சூர்யா பழகி வந்த பெண்ணுடன், அவரது நண்பர் பிரபு செல்போனில் தொடர்ந்து பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சூர்யா, மற்றொரு நண்பர் சிவாவுடன் சேர்ந்து மதுபோதையில் பிரபுவை அடித்து உதைத்து அதை வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ பற்றி தகவல் அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.