சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து ஒடுவன்பட்டி மலைப்பாதை வழியாக பொன்னமராவதிக்கு செல்லும் அரசு பேருந்து அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள், வாகன ஓட்டிகள் என பலரும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஒரு பெண் இது குறித்து டிப்போவில் பேசியும் இது போன்ற பேருந்துகளை அனுப்பி வைப்பதாக ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.