கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வல்லம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.