கடலூர் மாவட்டம் பெண்ணாடம் எல்லைக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த மக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போலீசுடன் மக்கள் வாக்குவாதம் செய்ததால் 20 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.