காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி, ஆட்சியர் அலுவலக அறை முன்பு அமர்ந்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புட்குழி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், ஆகவே சுரங்கப்பாதை அமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தம்... அதிகாரிகளின் செயலை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்