கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இருந்து கேரளாவுக்கு மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், புவனகிரி அடுத்த வண்டுராயன்பட்டு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் புவனகிரி - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக கிரேன் மூலம் சரக்கு வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது.