தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு இலவச ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி கிளப் சார்பில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு புரதம் சார்ந்த ஊட்டச்சத்து உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டன.