இராணிப்பேட்டையில் மத்திய அரசின் கடனுதவி திட்டத்தின் கீழ் தலா 10 லட்சம் கடன் பெற்று தருவதாக கூறி மகளிர் சுய உதவி குழுவினரிடம் 18 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கல்மேல்குப்பம் பகுதியை சேர்ந்த அசேன் என்பவர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும். மத்திய அரசின் கடனுதவி திட்டத்தின் கீழ் 10 லட்சம் கடன் பெற்று தருவதாக கூறி, சுமார் 250-க்கும் மேற்பட்ட, மகளிர் சுய உதவி குழு பெண்களிடம் 7 சதவீதம் கமிஷன் பேசி டாக்குமெண்ட்ஸ் சார்ஜ் என்ற பெயரில் தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : விவசாயியை ஏமாற்றி ஏடிஎம் கார்டில் பணம் எடுக்க முயற்சி... வடமாநில இளைஞரை மடக்கிப் பிடித்த மக்கள்