திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமணத்திற்கு இணையத்தில் பதிவு செய்த இளைஞரிடன் ரூபாய் 5 லட்சம் வரை பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார். சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் கருவாக்குறிச்சி பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவர் இணைய வழி மூலமாக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தங்கவேலு இணையத்தில் பதிவு செய்த தகவல்கள் மூலம் தொடர்பு கொண்ட ஸ்வேதா என்ற பெண், ஆன்லைனில் பிட்காயின் மூலம் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளார். இது குறித்து தங்கவேலு அவரது தந்தை மூலம் திருவாரூர் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.