விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி 30 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். பள்ளிதென்னல் பகுதியைச் சேர்ந்த சுபலட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எஸ்பியிடம் அளித்த மனுவில், தங்கள் ஊரைச் சேர்ந்த பிரகாஷ் - செல்வி தம்பதி நடத்தி வந்த தீபாவளி சீட்டில் தானும், தனது நண்பர்களும் சேர்ந்ததாக கூறியுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே 30 லட்ச ரூபாய் வரையிலான தொகை கொண்ட அனைத்து சீட்டுகளை கட்டி முடித்துவிட்டதாகவும், தீபாவளிக்காக பணத்தை கேட்டபோது, காலம் தாழ்த்தி வருவதுடன், கொலை மிரட்டலும் விடுப்பதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.