விழுப்புரத்தில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறி 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 2 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் கடன் பெற்று ஒரு லட்ச ரூபாய் கடன் என கூறி ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு தலா 10 ஆயிரம் கமிஷன் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.