திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அறக்கட்டளை என்ற பெயரில் 2 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். புது அம்பேத்கர் தெரு பகுதியைச் சேர்ந்த குட்டி என்ற ராஜசேகர், தயா என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி, பாதி விலையில் பைக்-கார் வாங்கி தருவதாகவும், வீடு கட்டி தருதாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்போம் எனவும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த ஏமாற்று வேலைகளை பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்களை குறி வைத்தே நடத்தியதாக கூறப்படுகிறது.