திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபரை கைது செய்து, பணத்தை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். குவேந்திரன் என்ற நபர் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி, தன்னை ராணுவ வீரர் என அறிமுகப்படுத்தி பலரை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார்.