தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்த முனியப்பன், தனது நண்பரின் மகளான கண்மணி என்பவரிடம், ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அடிக்கடி தொலைபேசியிலும், குறுஞ்செய்தி மூலமும் பேசி வந்த முனியப்பன் ஒரு கட்டத்தில் பாலியல் ரீதியில் பேசத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த கண்மணி தனது கணவர் கவியரசுவிடம் கூறியுள்ளார். இதையடுத்து பணம் தயார் செய்து விட்டதாகக் கூறி முனியப்பனை வரவழைத்த உறவினர்கள், சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.