நெல்லையில் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 பேரிடம் சுமார் 42 லட்சம் வரை மோசடி செய்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகன் என்ற மோசடி ஆசாமி அவரது வீட்டிற்கு சென்டரிங் வேலைக்கு வந்த சுடலைமணி என்பவரிடம் ரயில்வேயில் அதிகாரிகளை தெரியும் என பொய் கூறி 4 பேரை ஏமாற்றி மோசடி செய்துள்ளான்.