சென்னையில் மோசடி பணம் 80 லட்ச ரூபாய் மீட்கப்பட்டு, அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களில் சிலர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி அதில் முதலீடு செய்துள்ளனர். அந்த பணத்தை மோசடி செய்தவர்களை கைது செய்த போலீசார், அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து 80 லட்ச ரூபாயை மீட்டனர்.