காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கோவில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. ஏகாம்பரநாதர் கோவிலில் 1600 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி சிலைகள் சேதமடைந்ததாக புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்காக 2.82 கோடி ரூபாய் மதிப்பிலான 8.7 கிலோ தங்கம் நன்கொடையாக பெறப்பட்டது. இந்நிலையில் சிலைகள் செய்வதற்கு தங்கத்தை சேர்க்காமல் மோசடி நடைபெற்றதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்து எடுத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகள், மீண்டும் கோவில் பாதுகாப்பு அறையிலேயே வைக்கப்பட்டுள்ளன.