திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு 3 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. யாரும் வரவில்லை, நான் மட்டும் தான் வந்தேன்...அண்ணாடப்பட்டி பகுதியைச் சேர்ந்த திருவாகவுண்டர் மனைவி சரோஜா(73) என்பவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது மூதாட்டி சரோஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து விட்டு மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுண்டு வந்தபோது மர்ம நபர் ஒருவர் மூதாட்டி சரோஜாவிடம் உங்களுடன் யார் வந்தது என கேட்க, யாரும் வரவில்லை, நான் மட்டும் தான் வந்தேன் என மூதாட்டி பதில் அளித்துள்ளார். 50,000 பணமும், அரை பவுன் தங்க நகையும்...இதனை அறிந்த மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் இருந்த ஒரு வெற்று காகித்தத்தை எடுத்து இதில் கையெழுத்து போட்டு கொடுங்கள் 50,000 பணமும், அரை பவுன் தங்க நகையும் வருகின்ற 1-ம் தேதி கொடுக்கிறோம் என பேச்சுக் கொடுத்துள்ளார். அதனை கேட்ட மூதாட்டி சுதாரித்து கொள்வதற்குள் மூதாட்டி அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார்.கண்ணிமைக்கு நேரத்தில் செயின் பறிப்புஇதுகுறித்து மூதாட்டி சரோஜா திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட நகர போலீசார் மூதாட்டியிடம் மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு 3 சவரன் தங்க செயின் பறித்து சென்ற மர்ம நபரால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. Related Link பணி பாதுகாப்பு சிறப்பு சட்டத்தை இயற்றுக...