அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி. திண்டுக்கல் மாவட்ட முன்னாள் வருவாய் அலுவலர், தனக்கு மிகவும் பழக்கம் எனக்கூறி மோசடி செய்த இருவர். பல லட்சங்களை சுருட்டிவிட்டு தப்பி ஓடிய நண்பர்கள். இருவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை. மோசடியில் ஈடுபட்ட நண்பர்கள் சிக்கினார்களா? பின்னணி என்ன?ஈரோடு, கருங்கல்பாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர்தான் பிரவீனா. பக்கத்து ஏரியாவை சேர்ந்த விஜயலட்சுமியும், ஜான் மூர்த்தியும் பிரவீனா வீட்டுக்கு அடிக்கடி போக ஆரம்பிச்சிருக்காங்க. பிரைவேட் கம்பெனிகளுக்குதான் வேலைக்கு போகணுமா? அரசு வேலைக்குப்போறதுல விருப்பம் இல்லையானு ஆசைய தூண்டிருக்காங்க. வேலைனு ஒண்ணு கிடைச்சாலே போதும்ங்குற மனநிலையில இருந்த பிரவீனாவுக்கு அரசு வேலைனு சொன்னதும் சந்தோஷப்பட்ருக்காங்க. அப்போ, கொஞ்சம் செலவாகும் பரவா இல்லையானு தூண்டில் போட்ட விஜயலட்சுமி, வேலை கிடைச்சிட்டா செலவு செஞ்ச தொகைக்குமேல அள்ளலாம்னு சொல்லிருக்காங்க. நகைகளை அடகு வச்சி தொகையை கொடுக்கலாம்னு முடிவெடுத்த பிரவீனா என்ன வேலைனு கேட்ருக்காங்க. திண்டுக்கல் மாவட்ட முன்னாள் வருவாய் அலுவலர் தனக்கு ரொம்ப வேண்டியவருதான் அவரு நினைச்சா, ஆட்சியர் அலுவலகத்துல ஈசியா வேலை வாங்கி குடுக்க முடியும், எங்களோட பொறுப்புனு வாக்குறுதி குடுத்த விஜயலட்சுமியும், ஜான் மூர்த்தியும் பிரவீனாக்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா 30 லட்சத்துக்கு மேல வாங்கினதா சொல்லப்படுது. இருந்த நகைகளை எல்லாம் அடகுவச்சி பணம் குடுத்த பிரவீனாக்கிட்ட அதுக்குப்பிறகும் பணம் பணம்னு நச்சரிச்சிருக்காங்க. ஆனா, வேலைய வாங்கி குடுக்குறதுக்கான எந்த அறிகுறியுமே தெரியல. அதனால, சந்தேகப்பட்ட பிரவீனா தனக்கு வேலையே வேண்டாம் குடுத்த பணத்த தாங்கனு கேட்ருக்காங்க. அப்பதான், விஜயலட்சுமியும், ஜான் மூர்த்தியும் தங்களோட சுயரூபத்தையே காட்டிருக்காங்க. இந்த சம்பவம் நடந்தது 2018-ல. பணத்த குடுக்காம, இன்னைக்கு நாளைக்குனு நாட்களை கடத்திருக்காங்க. ஒருகட்டத்துல மிரட்டவும் ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்குப் பிறகு தான், ரெண்டு பேருமேலயும் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்க பிரவீனா. ஆனா, போலீஸ் ஸ்டேஷன்ல எந்த நடவடிக்கையுமே எடுக்கல. அதுக்குப்பிறகு சென்னை உயர்நீதிமன்றத்துல வழக்கு தொடுத்துருக்காங்க. அடுத்து வழக்க விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ருக்குது. அதுக்குப்பிறகுதான், காவல்துறை விசாரணை நடத்தி விஜயலட்சுமியையும், ஜான் மூர்த்தியையும் கைது பண்ணாங்க. இந்த மோசடி வழக்கு ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துல நடந்துட்டு வந்நது. 7 வருஷமா நடந்துட்டு வந்த இந்த வழக்குல விஜயலட்சுமி, ஜான் மூர்த்தி ரெண்டுபேருக்குமே அஞ்சரை வருஷம் சிறை தண்டனை விதிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்குது.