திருச்சி மாவட்டம் பாலக்கரையில் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுப்பட்ட மூன்று பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். பாலக்கரை பகுதியில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் வரவு செலவு கணக்குகளை நிதி நிறுவன அதிகாரி ஆகாஷ் தணிக்கை செய்தார். அப்போது 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 3 பேர் 132 கிராம் போலி நகைகளை அடமானம் வைத்து 5 லட்சம் ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.