அரசின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக மக்களை ஏமாற்றிய போலி நிறுவனங்களின் முகவர்கள் 5 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். 9 நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொண்ட வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார், சையது முகமது சைபுதீன், மகேஸ்வரன், கார்த்திக்பாபு, ஈசா மரிய பாபு ஆகியோரை கைது செய்தனர்.