மதுரை மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண்ணையும், அவருக்கு உதவியாக இருந்த தலைமைக் காவலரையும் நெல்லை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் வி.கே.புதூரை சேர்ந்த முருகராஜ், நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த வளர்மதி என்பவருடன் பழகி வந்த முருகராஜ், அவரை நெல்லையிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். இதனிடையே மதுரையை சேர்ந்த சசிக்குமார் என்பவரிடம், தன்னை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் எனக் கூறி 10 லட்சம் பணம் பெற்று வளர்மதி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வளர்மதியையும், அவருக்கு உதவியாக இருந்த முருகராஜையும் போலீசார் கைது செய்தனர்.