நடக்கும் மோசடி : ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன மோட்டார் ஆய்வாளர் தங்கராஜ் புரோக்கர்களை கொண்டு. தனது அரசு பணிகளை மேற்கொள்வதாக நியூஸ் தமிழுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது மேலும் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகன மோட்டார் ஆய்வாளர்களுக்கு என்று அரசால் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ள கணினி மற்றும் டேப் மூலம் சம்பந்தப்பட்ட வாகன மோட்டார் ஆய்வாளர்கள் தங்களது பணியினை மேற்கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மட்டும் வாகன மோட்டார் ஆய்வாளரின் பணி தலைகீழாக உள்ளது காலையில் புதிய வாகனங்கள் பதிவு கனரக வாகனங்கள் எப்சி எடுப்பது உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மட்டும் மேற்கொள்ளும். வாகன மோட்டார் ஆய்வாளர் தங்கராஜ் மதியத்திற்கு பின் அலுவலகத்தில் கணினி மூலம் ஆன்லைன் அனுமதி கொடுப்பதற்கான வேலையை செய்யாமல் வீட்டிலேயே இருந்து வருவதாகவதாக கூறப்பட்ட நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சென்று பார்த்தபோது தகவல் உறுதி செய்யப்பட்டது. மேலும் வாகன மோட்டார் ஆய்வாளர் தங்கராஜ் அறையில் அவருக்கு சொந்தமான அரசு கணினியில் புரோக்கர் மாரி அமர்ந்து கொண்டு காலையில் ஆய்வு செய்து ஆன்லைன் அனுமதி கொடுப்பதற்கான வேலைகளை முறையாக சரி பார்க்காமல் தனக்கு வேண்டப்பட்டவரிடம் லஞ்சத்தொகையை பெற்றுக் கொண்டு புரோக்கர் மாரியே ஆன்லைன் அனுமதி வழங்கி வருவது. தெரிய வந்தது. குறிப்பாக புதிய வாகனங்களுக்கான பதிவுகள், கனரக வாகனங்களுக்கான எப்சி மற்றும் விபத்து வாகனங்களுக்கான மெமோ ஆகியவற்றை இவரே ஆன்லைன் அனுமதி கொடுத்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாகன மோட்டார் ஆய்வாளர் தங்கராஜிடம் கேட்டபோது அப்படி எல்லாம் கிடையாது என்று மழுப்பிய அவர் வீடியோ ஆதாரம் உள்ளது என்றவுடன் நேரில் வந்து பேசிக் கொள்ளலாம் என செய்தியாளருக்கு லஞ்சவலை வீசினார். லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அருகாமையில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும் லஞ்ச ஒழிப்பு துறையும் கிடுக்கு பிடி விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எடுத்துள்ளது. Related Link சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தின் பரபரப்பு காட்சி!